English മലയാളം

ஸ்கந்தஹோரை உங்களை வரவேற்கிறது!

எனது தாய் தந்தை, பராத்பரகுருவாகிய ஞானஸ்கந்தர், குருவாக இருப்பவர்கள், மூலாதாரமூர்த்தியாகிய வினாயகர், வாக்தேவதையாகிய சரஸ்வதி, வேதவ்யாஸமுனிவர், குல-தர்ம-இஷ்ட தேவதைகள் மற்றும் ஆதித்யாதி நவக்ரஹ-நக்ஷத்திர-ராசி தேவதைகளின் அனுக்ரஹத்துடன் நான் இந்த ப்ளாகை மிகவும் தாழ்மையுடன் விஜயதசமி நாளில் (USA: அக்டோபர் 18, 2018) ஆரம்பிக்கிறேன்.

ஜ்யோதிடசாஸ்திரத்தின் ஆறு அங்கங்களாகிய கோளம், கணிதம், நிமித்தம், ஜாதகம், ப்ரச்னம் மற்றும் முஹூர்தம் என்கிற விஷயங்களை உள்கொண்ட – வெளியிடப்பட்டதும் அல்லாததுமாகிய – எனது வசம் உள்ள க்ரந்தங்களின் மூலமும் பொருளடக்கமும், உதாரணத்துடன் வழங்க எனக்கு துணைக்கு ஜ்யோதிடசாஸ்திரம் படைத்த பகவான் ஸ்கந்தாசார்யரை வணங்குகிறேன்.

வேதாங்கமாகிய இந்த சாஸ்திரம் படிக்கின்ற மாணவ-மாணவியர்களுக்கும் இதை தொழில்முறையில் கொண்டுசெல்லும் அனைவருக்கும் இந்த ப்ளாக் உபயோகமாக இருக்கட்டும் என்று ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்.

தமிழ், மலையாளம் மற்றும் ஆங்கில மொழிகளில் எழுதப்படும் பாடங்களுடன் க்ரந்த மூலத்தின் ஆடியோ, விரிவுரைகளின் வீடியோ, கேள்வி-பதில்கள் ஆகியவற்றையும் டௌண்லோட் செய்ய வஸதி இருக்கும்.

மிகவும் புனிதமான இந்த சாஸ்திரம், மக்களை ஏமாற்றும் சிலர் கையில் சிக்கி பிரபலமற்ற இடத்தை சேர்ந்துள்ளது மிகவும் வருத்தத்தை தருகிறது.  இந்த நிலை மாறவேண்டும்.

இதை கற்றுக்கொள்பவர்கள் முழுமையாக கற்றுக்கொண்டு அதே நேரத்தில் தினசரி ஆத்மீயமாகிய முன்னேற்றத்தையும் அடைந்து பொருளாசை கூடாமல் தங்களை நாடி வருபவர்களுக்கு நல்வழி காட்டினால் கேவலம் ஜ்யோதிடர் என்கிற பதவியிலிருந்து தைவஞர் என்று பெயர்பெற்று ஸகல ஐஸ்வர்யங்களையும் பெறுவர் என்பது திண்ணம்.

Views: 1695