English മലയാളം

(மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்கப்பட்டுள்ளது)

பகவான் ஞானஸ்கந்தர் தனது பதினெட்டு சீடர்களில் முதல்வரான அகஸ்திய மகரிஷிக்கு அளித்த உபகாரஸாஹஸ்றி என்கிற க்ரந்தத்தில் தைவஞ தர்மோபகாரங்கள் எங்கிற பதினோராம் அத்தியாயத்திலிருந்து எடுக்கப்பட்ட 24 தர்மங்கள் இங்கே வழங்கப்படுகிறது.

ஜோதிட சாஸ்திரத்தின் திலகமும் முக்கிய க்ரந்தமுமாகிய ஸ்கந்தஹோரை கற்றிருந்த எனது தந்தையும் ஆன்மீக குருவுமாகிய ப்ரஹ்மஸ்ரீ என். காமேஸ்வரன் அவர்கள், ஆண்டவன் கட்டளைப்படி உபகாரஸாஹஸ்றியை க்ரந்தமலையாளத்தில் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகளிலிருந்து நகலெடுத்தார். இந்த புத்தகம் இதுவரை வெளியிடப்படவில்லை.

ஸ்கந்தன்: அகஸ்தியா! ஒரு தைவஞன் பின்பற்றவேண்டிய 24 தர்மங்கள் உள்ளது. அவற்றை உனக்கு விளக்குகிறேன்.

  1. துறவிகள் மற்றும் மாமுனிவர்கள் கண்டிப்பாக ப்ராணாயாமத்தை தினமும் காலையில் 24 முறை செய்யவேண்டும். பிரம்மசாரி துறவிக்கு சமனாக இருப்பதால் அவனும் செய்யவேண்டும். பிரம்மசாரியாயிருப்பினும் தெரிந்தோ தெரியாமலோ பிரம்மசர்ய விரதத்தை தவறினவன் செய்யக்கூடாது.
  2. க்ரிஹஸ்த தர்மத்தில் இருப்பவன் கண்டிப்பாக தன் மனதுக்கு பொருந்திய ஒரு தேவதையை உபாஸிக்கவேண்டும். அந்தணன் முக்கியமாக தினமும் காயத்ரி மந்திரத்தை குறைந்தபக்ஷம் 336-எண் ஜபம் செய்யவேண்டும்.
  3. சுக்லபக்ஷ ஏகாதசி திதியில் மிகவும் சாத்வீகமான உணவை அருந்தவேண்டும். அன்று உபவாசமும் இருக்கலாம். உளுந்து, வெங்காயம், மிளகு மற்றும் தயிர் சாத்வீக உணவுவகையில் சேராது.
  4. ஐந்து வயதுக்குப்பின் அசைவ உணவு அருந்தவேண்டாம். தெரியாமல் அருந்தியிருந்தால், விஷ்ணுபுராணத்திலிருக்கும் ஆதித்யஹ்ருதய மந்திரம் – ஸ்ரீராமனுக்கு நீ உபதேசம் செய்த அதே மந்திரம் – ஏழுமுறை ஜபம்செய்து பரிஹாரம் தேடவேண்டும்.
  5. ப்ரச்னசாஸ்திரம் பார்க்கும் தைவஞன் அந்தணனாக இருந்தால் ஸ்மார்த தர்மத்தில் முதலில் குருவையும், வைஷ்ணவ தர்மத்தில் குருவையும் விஷ்ணுவையும் ஒன்றாக சங்கல்பம் செய்து முதலாவது சோழியை வைக்க வேண்டும். இரண்டாவதாக விநாயகர், மூன்றாவதாக வாணி, நான்காவதாக வேதவ்யாசர், ஐந்தாவதாக நாம், ஆறாவதாக ஆதித்யாதிகள் என்று ஆறு சோழிகளை வலதுபக்கத்திலிருந்து வைத்துவரவேண்டும். ப்ரதக்ஷிணம் செய்வதுபோல் என்று பொருள்.
  6. அந்தணன் அல்லாத தைவஞன் முதலில் விநாயகர், இரண்டாவது குரு, மூன்றாவதாக வாணி எங்கிற முறையில் தொடர்ந்து சோழிகளை வைக்க வேண்டும்.
  7. சோழிகளை பக்தியுடன் தடவ வேண்டும்; உருட்டக்கூடாது.
  8. அமாவாசை மற்றும் பித்ரு தினங்களில் தேவப்ரச்னம் வைக்கக்கூடாது.
  9. தினமும் சூரிய பகவானை பிரார்தனை செய்தபிறகு ப்ரச்னப்பலகயை தொட்டு வந்தனம் செய்தபின் ராசிசக்கரத்தை எழுதவேண்டும்.
  10. எச்சக்கையால் சோழியை தொடலாகாது. கையை சுத்தம் செய்து ஆசமனமும் செய்தபின் மட்டுமே ப்ரச்னசிந்தை செய்யவேண்டும்.
  11. கழிப்பிடம் செல்லநேர்ந்தால் கையும் காலும் ஜலத்தில் சுத்தம்செய்து ஆபோஹிஷ்டாதி மந்திரத்தினால் ப்ரோக்ஷணஸ்னானம் செய்தபின் ப்ரச்னசிந்தை தொடரலாம்.
  12. அலட்சியமாக சோழிகள் பூமியில் விழுந்தால் பால் அல்லது கங்காஜலத்தில் சோழிகளை சுத்தம் செய்யவேண்டும். காய்ச்சிய பால் ஆகாது. ப்ரச்னம் ஆரம்பிக்கும் சமயமும் முடித்துக்கொள்ளும் சமயமும் கீர்ணஶ்ரேய: எங்கிற மந்திரத்தினால் சோழிகளைவைத்து பகவான் மஹாவிஷ்ணுவை பிரார்த்தனை செய்யவேண்டும்.
  13. ஏதாவது ஒரு சிவதியானமில்லாமல் சோழிகளை தடவக்கூடாது.
  14. சரியாக 108 சோழிகள் எண்ணிக்கையில் இருக்கவேண்டும்.
  15. கெட்டகுணம் படைத்தவர்களுக்கு ப்ரச்னம் பார்க்கவேண்டாம்.
  16. அறைகுறையாக ஜோதிடம் கற்றுக்கொண்டு தர்க்கம் செய்பவர்களை உடன் சொல்லியனுப்பவேண்டும்.
  17. ஏழையாக இருந்தாலும் பணக்காரனாக இருந்தாலும் தக்ஷிணை வாங்காமல் ப்ரச்னம் சொல்லவேண்டாம்.
  18. தக்ஷிணையின் ஒரு பங்கை இஷ்டதேவதைக்கு அல்லது அன்னதானத்திற்க்கு ஒதுக்கவேண்டும்.
  19. திருடனின் திசையை பற்றியோ பெண்ணின் கற்பை பற்றியோ ப்ரச்னத்தில் தெரியவந்தாலும் அதை சொல்லவேண்டாம்.
  20. ஆரூடம் தடைப்பட்டால் எட்டு நாட்களுக்குள் மீண்டும் ப்ரச்னம் பார்க்கலாகாது. அல்லது பரிஹார சங்கல்பத்துடனோ தாம்பூலத்தைக்கொண்டோ பார்க்கலாம்.
  21. மராத்திகள், மார்வாடிகள், மலையாளதேசத்தை சேர்ந்த கொங்கணர் மற்றும் தமிழகத்தை சேர்ந்த தேசிகர் இவர்கள் பொதுவாக ஜோதிட சாஸ்திரத்தை குறைசொல்லுபவர்கள் ஆவர். இவர்களில் நன்றாக அறிமுகமாகிய நபர்களுக்கு மட்டும் ப்ரச்னத்தை கூறலாம்.
  22. துச்சகுனங்கள் மற்றும் மரண செய்திகள் கேட்கும் சமயத்தில் ப்ரச்னம் சொல்லவேண்டாம். வந்தவன் சோதனை செய்ய வந்திருக்கிறான் என்று தெரிந்துகொள்.
  23. ஜோதிட சாஸ்திரம் உருவாக்கிய நம்மை நிந்தனை செய்பவனுக்கு ப்ரச்னம் கூறவேண்டாம்.
  24. சூரியவெளிச்சம் இல்லாத அறையில் சோழிகளை உபயோகம் செய்வதை தவிர்க்கவும். அல்லாதபக்ஷம் விநாயகனின் படம் அங்கே இருக்கவேண்டும். தைவஞன் சமாதானமாக பேசவேண்டும். எவ்வளவு ஆபத்தான சூழ்நிலையை ப்ரச்னத்தில் கண்டாலும் ஆறுதல் கூறவேண்டியதுதான் சாத்வீகமான தர்மம். ப்ரச்னத்திற்கு தேவையான பரிஹாரங்களை விதிக்கும்பொழுது வந்தவனுக்கு விஶ்வாஸமுள்ள பூசாரியை சரிபார்து கொடுக்கவேண்டும். கடல் கடந்து அன்னியதேசம் சென்றவனுக்கு அவன் உட்காந்திருக்கும் ராசியைவைத்து ப்ரச்னம் சொல்லவேண்டும். ப்ரச்னம் சொல்வது கடந்தகாலத்தை சொல்வதர்கல்ல, தோஷங்களுக்கு பரிஹாரம் சொல்ல மட்டுமே. விதவையான பெண் மற்றும் ஸந்தானபாக்கியம் இல்லாதவளுக்கும் ப்ரச்னம் பார்து நல்வழி காட்டவேண்டும்.

மாமுனிவரே! மேற்சொன்ன தர்மங்களை நம்பிக்கையுடன் கடைபிடிக்கும் தைவஞனின் வாக்கு பொய்யாகாது. நடந்தது, நடக்கின்றது மற்றும் நடக்கப்போகும் விஷயங்கள் கலியுகத்தில் இருக்கும் ஒளிச்சித்திரம் போல் அவனுக்குள் தெரியவரும். அவன் சொல்வது பலிக்கும். சந்தேகமிருக்கும் சமயங்களில், தனது இஷ்டதேவதையை நினைத்தாலே போதும்; வழி கிடைக்கும். இது சத்தியம். கலியுகத்தில் ப்ரச்ன க்ரந்தங்களில் மாதவீயம், க்ருக்ஷ்ணீயம் என்பவை நல்ல அனுபவத்தை தரும். எதுவாக இருந்தாலும் உபாஸனாபலம் இருக்கும் ஜோதிடனுக்கு கால்பங்கு ஞானமும் முக்கால்பங்கு தைவீகமும் சேர்ந்து இந்த சாஸ்திரம் முழுபலனையும் கொடுக்கும்.

சுபம்

Views: 849